உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
3. கட்டில் ஏற்றியது |
|
கடிகமழ் செல்வங் கலந்த
காலை இடியுறழ்
முரசின் ஏயர்பெரு
மகற்கும் பிடிமகிழ்
யானைப் பிரச்சோ
தனன்மகள்
வடிமலர்த் தடக்கை வாசவ தத்தைக்கும்
5 ஓருயிர்க் கிழமை ஓரை
அளக்கும் பேரிய
லாளர் பிழைப்பிலர்
நோக்கி வழுவில்
செந்தீப் பழுதில
வேட்கும் பொழுதுமற்
றிதுவெனப் புரையோர்க்
குரைப்ப,
|
|
1 - 8; கடிகமழ் செல்வங்.......புரையோர்க் குரைப்ப
|
|
(பொழிப்புரை) இங்ஙனமாகத்
திருமணம் பற்றிய மகிழ்ச்சி ஆரவாரம் சயந்தியின்கண் எழுந்தபொழுது, நல்ல
முழுத்தத்தைக் கணித்தறியும் சிறந்த கணிகள், நாள் கோள் முதலியவற்றை
விழிப்புடன் ஆராய்ந்து, உதயணனுக்கும் வாசவதத்தைக்கும் உயிர் ஒன்றென்னும்
உரிமையைத்தரும் திருமண வேள்வி வேட்டற்கேற்ற நல்ல முழுத்தம்
இஃதென்று பெரியோர்க்கு உணர்த்தாநிற்ப என்க. |
|
(விளக்கம்) 1. கடிகமழ்
செல்வம்-மணங் கமழ்தற்குக் காரணமான திருமண விழா வின்பம் என்க. 2.
இடியுறழ் முரசு-இடிபோல ழுழங்கும் முரசு. ஏயர் ெ.பருமகன்; உதயணன், 3. பிடியோடு
இன்புறும் களிற்று யானைகளை மிகுதியாகவுடைய பிரச்சோதனன்
மகள் என்க. இங்ஙனம் கூறியது இக் காதை வாசவதத்தையோடு
உதயணன் கூடி மகிழ்தலை உணர்த்துவதென்னும் நினைவினால் என்க
4. திருமணச் சடங்கு கை பிடித்தலே ஆகலின், 'வடிமலர்த் தடக்கை' எனக்
கையினை விதந்தெடுத்தோதினார். 6. ஓருயிர்க்- கிழமை -
உயிரை ஒன்றாக்கும் உரிமை. ஓரை. முழுத்தம் 7. பேரியலாளர்-பெரிய இலக்கணமறிந்த கணிமக்கள். புரையோர்- உயர்ந்தோர்.
|