| பக்கம் எண்:647
|
|
| உரை | | | | 2. இலாவாண காண்டம் | | | | 3. கட்டில் ஏற்றியது | | | ஐஒன்ப தின்வகைத் தெய்வ
நிலைஇய
கைபுனை வனப்பிற் கான்முதல்
தோறும்
ஆரணங் காகிய அணிமுளை அகல்வாய்ப்
20 பூரண பொற்குடம் பொலிய
இரீஇ
வெண்மணன் ஞெமிரிய தண்ணிழற்
பந்தருள்
ஐஇய வாசஆன் நெய்யொடு
கலந்த ஐவகை
உணவொடு குய்வளங் கொளீஇ
நறிய வாகிய அறுசுவை
அடிசிற் 25 பெருஞ்சோற் றமலை
பரந்துபலர் மிசையும்
மிச்சில் எய்தா உட்குவர் ஒருசிறை
| | | | 17- 26; ஐ ஒன்ப தின்வகை............உட்குவர் ஒருசிறை
| | | | (பொழிப்புரை) நாற்பத்தைந்துவகைத்
தெய்வங்களையும் மக்திரத்தானே நிலைபெறச் செய்த
ஒப்பனையழகுடைய காலிடந்தோறும் தெய்வத்தன்மையுடைய
கூலமுளைகளைடைய அகலிடத்தே பொன்னாலாகிய நிறைகுடங்களை அழகுற
அமைத்து, மணல் பரப்பப்பட்ட அப்பந்தரினகத்தே நெய்யோடு கலந்த
ஐந்து வகைப்பட்ட சிற்றுண்டிகளோடே தாளிப்பு வளமுடைய நறிய
அறுசுவை அடிசிலாகிய பெருஞ்சோற்றுத்திரளையை அந்தணர் பலரும் பரவ
இருந்துண்ணாநிற்பவும் எஞ்சிய உணவுப்பொருள் குவித்துக்கிடக்கும்
ஒருபக்கத்திலே என்க.
| | | | (விளக்கம்) 16.
நிலைஇய-நிலைக்கச் செய்த மந்திரத்தானே தெய்வங்களை நிலைக்கச்
செய்தகால் என்க.. கால்-பந்தற்கால.் 17.கைபுனைவனப்பு-ஒப்பனை
செய்யப்பட்ட அழகு. 20. இரீஇ- இருத்திவைத்தென்க. 21. ஞெமிரிய -
பரப்பிய . 22 . ஐஇய- வாசம் வியத்தகுமணம். ஆனெய்-பசு நெய், வான் என்று
கொண்டால் தூயதூஉமாம், 23. ஐவகையுணவு: ''கடிப்பன,நக்குவன,பருகுவன,
மெல்லுவன, விழுங்குவன'' என்னும் ஐந்துவகையவாகிய உண்டிகள்
என்க, குய்-தாளிப்பு. 25. அமலை-திரளை; கட்டி. பலர் என்றது வேள்வி
செய்யும் அந்தணரை. 26, எச்சில் -எஞ்சிய பொருள்.
உட்குவரு எனற்பாலது உட்குவர் எனநின்றது, பொருளிருக்கு
மிடமாகலின் பிறர் நுழைதற்கு அஞ்சுகின்ற ஒருபக்கம் என்க,
|
|
|