உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது |
|
கருதியது
முடித்த கடிநாட்
கோலமொடு பருதி
ஞாயிற் றுருவொளி
திகழக் கலிகெழு
மூதூர் கைதொழு
தேத்த வலிகெழு
நோன்றாள் வந்தவர் இறைவன
|
|
1 - 4;
கருதியது முடித்த.......வந்தவர் இறைவன்
|
|
(பொழிப்புரை) வத்தவர்
இறைவனாகிய உதயணகுமரன் திருமணக் கோலத்தானும் ஞாயிற்று மண்டிலத்தின்
அழகிய ஒளி போன்ற தன் முகத்தினது இயற்கை ஒளியானும் திகழாநிற்ப
அவ்வழகுத் தோற்றத்தைக் கண்ட ஆரவாரமுடைய அச்சயந்தி
மக்கள் கைகுவித்து வணங்கா நிற்ப, என்க
|
|
(விளக்கம்) வத்தவர் இறைவன் என்னும்
எழுவாய் (25-26) கட்டிலேற்றம் கடந்தபின் என்பதனோடு இயையும்
1. சயந்திமக்களாற் கருதிய கடிநாள், முடிக்கப்பட்ட பின்னர் என்க,
2. பருதிஞாயி்று இருபெயரொட்டு. வட்ட வடிவிற்றாகிய ஞாயிறு எனினுமாம்.
3, கலி -ஆரவாரம். மூதூர,் சயந்தி ;
ஆகுபெயர். 4, வலிகெழு நோன்றாள் என்புழி மிக்க வலிபொருந்திய
தாள் என்க. 5. வத்தவர் இறைவன் ; உதயணன்,
5 - 25 ; இனி இடைப்பிறவரலாகப் பிரச்சோதனன் மாண்பும் அவன்
மனைவியர் மாண்பும் கூறப்படுகின்றன.
|