(விளக்கம்) 1. மரபுளி -
முறைப்படி. 2. வயிரமணியாலே இயற்றிய வளைந்த குழை என்க. வார்ந்த-நீண்ட.
3, பெருமகன்; உதயணகுமரன். பீடு - பெருமை. 4. திருமண்ணுநீர்-மங்கல
முழுக்குக்குரிய நீர். விரைவதின்-விரைவாக. வருக என்று சான்றோர் அறிவுறுத்தா நிற்ப என வினைமுதல் வருவித்தோதுக.
(6-25. நீர்க்குடம் செல்லும் சிறப்பு.)
|