பக்கம் எண்:706
|
|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 6. தெய்வச் சிறப்பு | | இன்புற்
றிருவரும் இயைந்துடன் போகிய
நன்பெருங் காலை நல்லோர்
குறீஇக் கண்கெழு
பெருஞ்சிறப் பியற்றிப்
பண்புளிப்
பூப்புரி மாடத்துப் போற்றெனப் புகாஅத் 5
தேவ குலத்தொடு திருநகர்
வலஞ்செயல் காவல
குமரர் கடிநாட்
கடனென வென்றி
முழக்கங் குன்றாது வழங்குநர்
முன்னர் நின்று முன்னியது முடிக்கென
மங்கல மரபினர் மரபிற்
கூறக் 10 காவல குமரநுங் கடிநகர்
வலஞ்செய மேவினன்
அருள | | 1-11; இன்புற்று,.,,..,.,.மேவினன் அருள
| | (பொழிப்புரை) இவ்வண்ணம் வாசவதத்தையும் உதயணனும் உடலானும் உளத்தானும் பொருந்தி இன்புறா
நிற்பக்கழியா நின்ற காலத்தே ஒருநாள் சான்றோர் ஒருங்கு
கூடிக்கண்ணுக்கு அழகாகப் பொருந்திய திருவிழா எடுத்து அழகோடு
மலர்களானே ஒப்பனை செய்யப்பட்ட அராந்தாணத்துப்பூசனை மாடத்து
'எம்மைப் போற்றுவாயாக ! ' என்று புகுந்து.இறைவனை வழிபடலும்
அத்திருக்கோயிலோடு நகரத்தைவலம் வருதலும் மன்னர் மக்கட்குத் திருமணக் காலத்தே,
ஆற்றுதற்குரிய கடமையாகும் என்று அறிவிப்ப, அது கெட்டவெற்றி
ஆரவாரததை மக்கட்குக் குறைவின்றி வழங்குஞ் சிறப்பையுடைய
வள்ளுவர் இக்காரியத்தை நீயிர் தலைநின்றுசெய்து முடிப்பீராக என்று
நகரத்தார்க்கு முரசறைந்து தெரிவிப்ப; அதுகேட்ட மங்கல மரபினர்
அச்செய்தியை உதயணனுக்குக் கூற அவனும் அதனை உடன்பட்டருளா நிற்ப
என்க.
| | (விளக்கம்) நல்லோர் குழீஇ
வலஞ் செயல் காவலகுமரர் கடன் என (அதனை,) வழங்குநர் நகரத்தார்க்கு
நீயிர் முன்னின்று முடிக்கென (அதுகேட்ட) மங்கல மரபினர்
காவல குமரனுக்குக் கூற அவனும் (உடன்பட்டு) அருள என
இயைக்க. 1. இருவரும் உடன் இயைந்து இன்புற்றுப் போகிய காலை
என மாறுக, இருவரும் - வாசவதத்தையும்
உதயணகுமரனும். இன்புறா நிற்ப எனச்
செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக. 2. எல்லையற்ற இன்ப
நுகர்ச்சிக் கிடனாதல் பற்றி நன்பெருங்காலை என்றார்.
நல்லோர்-சான்றோர், குழீஇ - கூடி. 3.
பெருஞ்சிறப்பு-திருவிழா. பண்புளி-பண்போடே, பண்பு-ஈண்டு அன்பு
என்க.
4. பூப்புரி மாடத்து-பூவால் அருச்சனை
புரிதற்குரிய பூசை மண்டபத்தின் கண், எம்மைப்போற்றுக என்று இறைவனை
வணங்கிஎன்க. புகாஅ-புகுந்து. 5. தேவகுலம்
-திருக்கோயில். 6, கடிநாள்- திருமணக்காலத்தே. கடிநாளில்
காவல குமரர்க்குக் கடனாம் என்று அறிவிப்ப என்க-
7,அரசனது வெற்றிச்செய்தியைக் குறையாமல் நகரத்தார்க்குஅறிவுறுத்தும்
சிறப்புடைய வள்ளுவர் என்க. 8, அச் சான்றோர்
கருதிய இச்செயலை நீயிர் முன்னர் நின்று முடிப்பீராக என்று முரசறைந்து கூற
என்க. 9 மங்கல மரபினர்-மங்கலச்செயல்களை நிகழ்த்தும்
முறைமையினையுடைய உத்தியம் உடையோர் என்க. 10.
காவலகுமரன்-உதயணகுமரன். 11. மேவினன் அருள -
உடன்பட்டருள.
|
|
|