பக்கம் எண் :

பக்கம் எண்:752

உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
          மல்குகடல் தானை மன்னரை வணக்கிப்
          பில்குகளி யானைப் பிரச்சோ தனனெனும்
          ஐந்தலை நாகம் அழல வெகுட்டிப்
     30   பைந்தளிர்க் கோதையைப் பற்றுபு தழீஇச்ன
 
        27 - 30; மல்கு........தழீஇ்
 
(பொழிப்புரை) அவ்வுதயணகுமரன் பெருகிய கடல் போன்ற படையுடனே தன்னை எதிர்த்த அரசர்களை வென்று தன்னை வணங்கும்படி செய்து, மதஞ்சொரியும் களிப்பினையுடைடைய யானையையுடைய பிரச்சோதன மன்னன் என்னும் ஐந்தலை அரவினை வெகுள்வித்துப் பசிய தளிர் விரவிய மலர்மாலையினையுடைய வாசவதத்தையையும் கைப்பற்றித் தழீஇக் கொண்டு,என்க,
 
(விளக்கம்) 27. மல்கு-பெருகிய, கடலை ஒத்த பெரும்படையுடனே வந்து எதிர்த்த என விரிக்க. மன்னர் - வாசவதத்தையை  மீட்டற்கு வந்த அரசர்.
   28. பில்கு களியானை-மதம்சொரியா நின்ற களிப்பினையுடைய களிற்றியானை.
   29. சினமிகுதி கூறுவார் ஐந்தலை நாகம் என்று உருவகித்தார். 'ஐவாய் அரவின் அவிரழல் போன்று  சீறி'. (சீவக 2345)என்றார். திருத்தக்தேவரும். அழல-நெஞ்சழலும்படி. வெகுட்டி; பிறவினை; வெகுளச்செய்து,
   30. கோதை ; வாசவதத்தை. பற்றுபு -கைப்பற்றி. தழீஇ- தழுவிக் கொண்டு.