பக்கம் எண் :

பக்கம் எண்:779

உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          அறியாப் பாழியும் அறியக் காட்டிக்
          குறியாக் கூற்றத்தைக் கோள்விடுங் கொல்லெனச்
    75    சிறியோர் அஞ்சப் பெரியோர் புகல
          ஆனை யேற்றம் அறியக் காட்டி
          இருள்தெறு சுடரின் அன்ன இறைவன்முன்
          வருட்டுபு நிறுத்த மன்னணை நோக்கி
 
        73-78 ; அறியா,,,,,,,,,,,,,,,,,,,,,,நோக்கி
 
(பொழிப்புரை)  அதுகண்ட சிற்றின மாந்தர் நம் வேந்தன் பிறர் அறியவொண்ணாத இடத்தையும் உதயணன் அறிந்துகொள்ளும்படி காட்டிக் கூற்றுவனை ஒத்த அவ்  உதயணனை இங்ஙனம் சிறைவீடு செய்தலுந் தகுமோ! என்று அஞ்சா நிற்பவும், சான்றோர் மன்னன் தக்கதே செய்தான் எனக் கருதி அவனை விரும்பா நிற்பவும் ஞாயிற்றை ஒத்த அப் பிரச்சோதன மன்ன னுககுத் தான் நளகிரியை அடக்கி அதன் மேல் ஏறிய தனைக் கண்கூடாகக் காட்டி அவனைத் தன்வயமாக்கி அவன் கண்முன்னே அக்களிற்றை நிறுத்திய உதயண குமரனை அப் பிரச்சோதனன் நோக்கி என்க,
 
(விளக்கம்) 73. அறியாப்பாழி - பிறர் அறியக்கூடாத உரிமை மகளிர் இருக்கை முதலியன.
    74, 'குறியாக் கூற்றம்-தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப்பாலகர் முதியோர்',என்று குறியாமல் கொல்லும் கூற்றுவன். கூற்றுவன் ; உதயணனுக்கு உவமை  என்க,
    77, இருள் தெறுசுடர்-ஞாயிறு; இது பிரச்சோதனனுக்கு உவமை, பிரச்சோதனனுடைய செயல் நன்றியறிதலாலே நிகழ்தலான் அச்செயல்கண்டு சான்றோர் விரும்பினர் என்றவாறு. புகல்-விரும்பா நிற்ப.
    78, வருட்டுபு -வய மாக்கி, மன்னனை ; உதயணனை.