பக்கம் எண் :

பக்கம் எண்:784

உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          கெட்ட காலை விட்டனர் என்னாது   
          நட்டோர் என்பது நாட்டினை நன்றென
    120    உறுதுணைத் தோழன் மறுமொழி கொடுத்தபின்
 
        118 - 120 ; கெட்டகாலை.....................மறுமொழிகொடுத்தபின்
 
(பொழிப்புரை)  அவற்றைக் கேட்ட இடபகன் யூகியை நோக்கி , 'உற்றுழி உதவாது கைவிட்டனர்' என்று உலகம் பழிகூறாதபடி 'யூகிமுதலிய உதயணன் நண்பர் மெய்ந் நண்பர்களே' என்று உலகம் புகழும் புகழை நிறுத்தினை நண்பனே! தக்கதே   செய்தனை! என்று பாராட்டுரை வழங்கிய பின்னர் என்க.
 
(விளக்கம்) 'அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைபோல் உற்றுழித்' தீரும் தீய நண்பரை உலகம் பழித்தலும், 'அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல' ஒட்டியுறும் நன்னண்பரைப் புகழ்தலும் உண்மையின் கெட்டகாலை விட்டனர் என்று உலகம் பழி கூறாமல், மெய்ந்நண்பரே என்று புகழும்படி செய்தனை நன்று என்று  பாராட்டினான் என்க.
    120, தோழன் ; இடபகன்.