பக்கம் எண்:803
|
|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 10 . யூகிக்கு விலாவித்தது | | அறம்புரி யாட்டி அமைச்சனி னீங்கி
மறம்புரி தானை மன்னவன்
இருந்த தயங்கிதழ்த்
தாமரைத் தண்பணை தழீஇய
சயந்தியம் பெரும்பதி இயைந்தகம் புக்குப்
5 பொன்வரை அன்ன பொருவில்
ஆகத்து மன்ன குமரனை
மரபுளிக் குறுகித்
தாய்காண் கன்றிற் காவலன் விரும்பி
ஏற்ற செவ்வி மாற்றங்
கூறிச் சேடுபடப் புனைந்த
சித்திரந் கம்மத்துப் 10 பீடங்
காட்டலின் ஈடுபட இருந்து
| | 1-10 அறம்புரி..... ...இருந்து
| | (பொழிப்புரை) இவ்வாறு
சாங்கியத்தாய் யூகியினிடத்தினின்று நீங்கித் தானையையுடைய உதயணமன்னவன் இருந்த சயந்தி நகரத்திற் புகுந்து அம் மன்னனை விதிப்படி
அணுகாநிற்ப, அவனும், தன் தாயைக் கண்ட கன்றுபோல விரும்பி அவளை வரவேற்ற
பொழுது, அவனொடும் பேச வேண்டுவன பேசிப் பின்னர் அவன் காட்டியதோர்
இருக்கையின் மேல் அமர்ந்து
| | (விளக்கம்) 1. அறம் - துறவறம்.
.அமைச்சன் - யூகி. 2. மறம்புரிதானை - வீரச் செயலையே
விரும்பும் படை, மன்னவன்; உதயணன். 3, தயங்கு
இதழ்த் தாமரை விளங்குகின்ற இதழ்களையுடைய தாமரை மலர் என்க. தண்பணை -
மருதநிலம். தழீய - தழுவிய மருத ; நிலத்தை யடுத்திருந்த சயந்தி
என்றவாறு. 5. பொன்வரை - இமவான், பொருவில் ஆகம் -
ஒப்பற்ற மார்பு. 6. மன்னகுமரன்; உதயணன், மரபுளி -
அரசரைக் காணும் முறைப்படி. 7. தாய் - தாய்ப்பசு, கன்று -
ஆன்கன்று, 8, ஏற்ற செவ்வி - வரவேற்ற பொழுது. 9 - 10
அழகுண்டாக இயற்றப்பட்ட சித்திரத் தொழில் திறனமைந்த பீடம் என்க.
அம்மன்னவன் காட்டலாலே அதன்கண் இருந்தென்க. ஈடுபட - சமமாக; எளிவரவுபட
என்பாருமுளர். துறவி யாகலின் உதயணன் தன்னோடு சமமாக இருக்கச் செய்தான்
என்பது கருத்து.
|
|
|