பக்கம் எண் :

பக்கம் எண்:825

உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
         விலாவணை ஒழியான் வீணைக் கைவினை
         நிலாமணிக் கொடும்பூண் நெடுந்தகை நினைந்து
         வைகல் தோறும் வான்மதி மெலிவிற்
         பையுள் கொண்ட படிமை நோக்கி
    5    அரும்பெறல் அமைச்சரொ டொருங்குடன் குழீஇக்
 
        1 - 5 ; விலாவணை...,,,,,,,,,குழீஇ
 
(பொழிப்புரை) இவ்வண்ணமாக நெடுந்தகை யூகியை நினைத்து புலம்புதல் தவிரானாய், நாள்தோறும் தேய்பிறை போல மெலிந்து வருத்தம் மேற்கொள்ளா நிற்ப, வனது உருவத்தை நோக்கிய உருமண்ணுவா ஏனை அமைச்சரோடு ஒருங்குகூடி ஆராய்ந்தபொழுது என்க.
 
(விளக்கம்) 1 - 2. விலாவணை-அழுகை, வீணை வாசித்தலிற் சிறந்தவனும், முத்துமாலை முதலிய அணிகலன்களை அணிந்தவனும் நெடிய புகழினையுடையவனும் ஆகிய உதயணகுமரன் என்க. யூகியை நினைந்தென்க.
     3, வைகறோறும்- நாள்தோறும். மதி - தேய்பிறை,
     4. பையுள்-துன்பம். படிமை-உருவம்.
     5. குழீஇ-கூடி. ஆராய்ந்தபொழுது என வருவித்துரைக்க.