பக்கம் எண்:888
|
|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 16. ஊடல் உணர்த்தியது | | புனைமலர்ப்
பிணையல் புரவலன் சூட்டி
இனமடற் பெண்ணை
ஈர்ந்தோடு திருத்திச்
செல்க நங்கை
மெல்ல நடந்தென
அடுத்த காதலொ டண்ணல் விடுப்ப
| | [உதயணன் விரிசிகையைப்
போகவிடுதல்]
1 - 4 ; புனைமலர்................விடுப்ப
| | (பொழிப்புரை) இவ்வண்ணம்
புரவலன் விரிசிகைக்குப் புனைமலர்ப் பினையலைச் சூட்டி. அவள் தன்
காதோலையினையுஞ் சீர் திருத்தியிட்டு'நங்காய்! இனி மெல்ல மெல்ல
நடந்து செல்வாயாக' என்று கூறிக் காதலோடே விடை கொடுத்துய்ப்ப
என்க.
| | (விளக்கம்) 1.
புரவலனாகிய(ச) அண்ணல் காதலொடு சூட்டித்திருத்தி நங்கை (இனி) நீ மெல்ல
நடந்து செல்க என்று கூறிவிடுப்ப எனக் கூட்டுக, புனைமலர் ;
வினைத்தொகை, பிணையல் - மாலை. புரவலன் - அரசனாகிய
உதயணன், 2, புல்லினமாகிய பெண்ணை, மடற் பெண்ணை என்று தனித்தனி
கூட்டுக இளமலர்ப் பெண்ணை என்றும் பாடம். பெண்ணை - பனை.
ஈர்ந்தோடு - ஈரமான ஓலை ; இஃது காதணி. 3,
நங்கை - மகளிருட் சிறந்தவள்
|
|
|