உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
35. நருமதை சம்பந்தம் |
|
செயிர்வுள் ளுறுத்த நோக்கமொடு நறவின்
195 வாசங் கமழு மோசைய
வாகிக்
கிளிப்பயி ரன்ன களிப்பயின்
மழலை எய்தா
வொழுக்கமொ டைதவட்
பயிற்றி
எயிறு வெளிப்படா திறைஞ்சி
ஞிமிறினம்
மூசின கரிய கோதையிற் புடைத்துப்
200 பூங்குழை மகளிர் புலவிகொ
டிருமுகம் தேர்ந்துணர்
காட்சியிற் றிரிந்துநலங் கரியப்
|
|
(இதுவுமது) 194 - 201:
நறவின்..........கரிய
|
|
(பொழிப்புரை) கள்மணங் கமழா நின்ற
இனிய ஓசையை உடையனவாகிக் கிளிகள் மிழற்றுவதை ஒத்த களிப்புமிக்க மழலை
மொழிகள் பலவற்றை ஒன்றற்கொன்று பொருத்தமற்ற
நடையினையுடையவாய் அவ்விடத்தே மெல்லப் பேசித் தமது புன்முறுவல்
வெளிப்படாமைப் பொருட்டுச் சிறிது குனிந்து வண்டினம் மொய்த்தனவாகிய
கரிய நீலமலர் மாலையாலே அவரைப் புடைத்து ஊடல்கொண்ட அழகிய
அப்பரத்தையர் முகத்தை அத்தலைவர் தமது ஆராய்ந்துணரும் அறிவினால் அறிந்து
மனம் திரிந்து தம் அழகு கெடுதலானே என்க.
|
|
(விளக்கம்) (176 - 201) பூங்குழைமகளிர் ஓப்பிச் சுருக்கி ஏந்தி ஏற்றி விடுத்து
இயைவித்துச் சுவைத்துப் (பின்னர்) இசை தள்ளி (முரன்று) மம்மர் எய்தி
இடுக நோக்கிப் பிறழக் கூர விம்மி உயிர்த்துக் கோட்டிச் செல்க என்று
ஏற்றிச் செருக்கிக் கொண்டு பொறாது நோக்கமொடு மழலை பயிற்றுப்
புடைத்துப் புலவிகொள் அவரது திருமுகத்தைக் காட்சியினால் (தெரிந்து) தமது
நலம் திரிந்து கரிதலாலே என வினையியையு காண்க.
|
நறவருந்தி மழலை பேசுதலானே அவர் மொழி அந்நறவின்
மணங்கமழ்வதாகி என்றார். வளியின்கண் நிகழும் பண்பினை ஒலியின்
மேலேற்றிக் கூறுதல் ஒரு வழுவாயினும் அமைத்துக் கொள்க. பயிர் -
பயிர்தல். எய்தா ஒழுக்கம் என்றது அவர்தம் சொல்நடையை. ஐது - மெல்லிது.
எயிறு : ஆகுபெயர். ஞிமிறு - வண்டு. மூசினவாகிய கோதை என்க. தேர்ந்துணர்
காட்சி என்றது பதம்பார்க்கும் அறிவினை. தலைவருடைய நலம் திரிந்து கரிய
என்க.
|