பக்கம் எண் :

பக்கம் எண்:97

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           மின்னிழ் பொருட்டா மேலவன் கொண்ட
          துன்னரும் பெரும்பழி நன்னகர் கழுமக்
          கம்பலை மூதூர் வம்பல ரெடுத்த
          படுசொ லொற்றர் கடிதவ ணோடி
     5    வானுற நிவந்த வசையின் மாணகர்த்
          தாம்பெறு செவ்வியுட் டலைமகற் குணர்த்தக
 
        ( ஒற்றர் பிரச்சோதனனுக்கு உணர்த்துதல் )
             1 - 6 : மின்னிழை.........உணர்த்த
 
(பொழிப்புரை) வாசவதத்தைக்குப் பழிச்சொல் தோன்றாமைப் பொருட்டு உயர்குடித் தோன்றலாகிய உதயணகுமரன் மேற்கொண்ட கிட்டுதற்கரிய பெரிய பழிச்சொல் அவ்வுஞ்சை என்னும் சிறந்த நகரமுழுதும் பரவா நிற்ப, ஆரவாரமிக்க அப்பழைய ஊரின்கணுள்ள வம்பமாக்கள் தூற்றிய அப்பழிமொழிகளைக் கேட்ட ஒற்றர்கள் விரைந்து அரண்மனைக்கட் சென்று வானத்தைத் தீண்டும்படி உயர்ந்துள்ளதும் பண்டு பழிச்சொல் ஏற்றறியாததும் மாண்புடையதுமாகிய அவ்வரண்மனையிலே தாம் மன்னவனைக் காண்டற்கு வாய்த்த செவ்வியிலே அம் மன்னனை எய்தித் தான் ஒற்றிவந்த செய்தியை அறிவியா நிற்ப, என்க.
 
(விளக்கம்) துன்னரும் பெரும்பழி என்றது அவன்பாற் சேர்தற்கு இயலாத பழி என்றவாறு. கழுமுதல் - நிரம்புதல.் கம்பலை - ஆரவாரம். படுசொல் - பழிபடுசொல். அவண் - அவ்வரண்மனைக்கண். தலைமகன் - மன்னன்.்னன்.