உரை |
|
5. நரவாண காண்டம் |
|
4. வயாத் தீர்ந்தது |
|
விழுச்சீர்
விசும்பி னியங்குதற் கறிதலின் 110
மூரிப் பசும்பொன் மால்வரை
கண்ணுற் றோசனை
யிழிந்து முகடுவலஞ் செய்து
துகடீர் பெருமைச் சேதியந்
தொழுது விதியிற்
போதன் மேவின னாகி
|
|
(இதுவுமது)
109 - 113 :
விழுச்சீர்............ஆகி
|
|
(பொழிப்புரை) பறத்தற்கு
மிகவும் சிறப்புடையதாகிய அவ்வான வெளியின்கண் இயங்குதற்கு நன்கு அறிதலாலே மேலும்
செல்லுங்கால் பெரிய பொன்னாகிய மேருமலையை அவ்வானத்திலிருந்தே கண்டு ஒரு யோசனைத்
தொலைவு அவ்விடத்தினின்றும் இறங்கி அம்மலைச் சிகரத்தின்பக்கத்தே சென்று அதனை
வலம் வந்து உயிர்களின் மாசு தீர்தற்குக் காரணமான சிறப்பினையுடைய ஆங்குள்ள அருகன்
கோயிலைக் கைகுவித்துத் தொழுது பின்னர் முறையே செல்லுதற்குப் பொருந்தியவனாய்
என்க.
|
|
(விளக்கம்) விழுச்சீர் - பெருஞ்சிறப்பு.
அறிதலின் மேலும் இயங்கி என்க. மூரி - பெரிய. மகாமேரு என்னும் வழக்குப்பற்றி
மால்வரை என்றார். ஓசனை - யோசனை. இஃதொரு நீட்டலளவை. முகடு - உச்சி, சிகரம்
என்க. சேதியம் - அருகன் கோயில்.
|