உரை |
|
5. நரவாண காண்டம் |
|
4. வயாத் தீர்ந்தது |
|
135 அப்பா லெல்லை முடிந்தபி
னிப்பால்
அவந்திகை நாடு மணியுஞ்
சேனையும் மலைமருங்
குறையு மழகளிற்
றீட்டமும் கலைமா
னேறுங் கவரியுங் களித்த
அருவித் தலையு மணிமலை யிடமும்
140 குளிர்பொழிற் சோலையுங் குயிற்றொகைப்
பரப்பும்
மயில்விளை யாட்டு மான்கண
மருட்சியும் புயல்வளம்
படுக்கும் பொருவில் வளமை
அவந்தி நாடு மிகந்துமீ தியங்கித்
|
|
(இதுவுமது)
135 - 143 : இப்பால்............இயங்கி
|
|
(பொழிப்புரை) அவ்
வித்தியாதர ருலகத்தின் இப்பாலுள்ள வாசவதத்தை பிறந்த நாடாகிய அவந்தி நாட்டையும்
அந்நாட்டின்கண் அமைந்த அழகிய உஞ்சை நகரத்தையும் மலைகளையும் அம்மலைச்சாரலில்
உறைகின்ற இளங்களிற்றியானைக் கூட்டங்களையும் பிணைமானும் கலைமானும் கவரிமானும் அதன்
ஏறும் கூடிக் களியா நின்ற அருவி வீழ்கின்ற இடங்களையும் அழகிய பிறமலையிடங்களையும்
குளிர்ந்த பொழிலாகிய சோலைகளையும் குயில்கள் தொக்கிருக்கின்ற
நிலப்பரப்பினையும் மயில் விளையாடுதலையும் மான் கணங்கள் மருண்டோடுதலையும் கண்டு கண்டு
முகில் பொய்யாது பெய்து வளமுண்டாக்குகின்ற ஒப்பற்ற வளத்தையுடைய அவ் வவந்தி
நாட்டையுங் கடந்து மேலும் சென்று என்க.
|
|
(விளக்கம்) இப்பால் என்றது இந்த
நாவலந்தீவின்கண் என்றவாறு. அவந்திகை - வாசவதத்தை. உஞ்சேனை - உஞ்சைநகரம்.
(உஜ்ஜையினி). மழகளிறு - இளங்களிறு. கலைமானாகிய ஏறும் எனினுமாம். கவரி , கவரிமான்.
அருவித்தலை - அருவிவீழுமிடம். புயல் - முகில். வளமை - வளப்பம். மீது -
மேலும்.
|