பக்கம் எண் :

பக்கம் எண்:101

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
            மாணக னென்பேன் மற்றிந் நாடு
            காண லுறலொடு காதலிற் போந்தனென்
            என்றது சொல்ல நன்றென விரும்பி
            ஆய்புக ழண்ணலை யறிந்தன ளாகிச்
     200    சேயிழைக் கூன்மகள் சென்றனள் விரைந்தென்
 
           (இதுவுமது)
      196-200  ; மாணகன்.........விரைந்தென்
 
(பொழிப்புரை) மாணகன் என்பது என் பெயர்; யான்
  இம்.மகதநாட்டினைக் காண்டல் வேண்டும் என்னும் விருப்பத்தோடே
  இங்கு வந்தேன்காண்! என்ற விடையைக் கூறுதலாலே சிவந்த
  அணிகலன் அணிந்த அந்தக் கூனி  ''நன்று! நன்று!,, என்று
  விரும்பிக் கேட்டுப் பலரும் ஆராய்தற்குரிய புகழையுடைய உதயண
  நம்பியை இவ்வாறு அறிந்துகொண்டவளாய் விரைந்து  
  அவ்விடத்தினின்றுஞ் சென்றனள்; என்க.
 
(விளக்கம்) காணலுறல் ; ஒருசொல். அண்ணலை வாய்மையாக
  அறியாமல். இவன் காந்தாரநாட்டுப் பார்ப்பனன் என்று
  அறிந்தவளாய்ச் சென்றனள் என்றவாறு.

                6. பதுமாபதியைக் கண்டது முற்றிற்று.
  -----------------------------------------------------------------------------