பக்கம் எண் :

பக்கம் எண்:1012

உரை
 
5. நரவாண காண்டம்
 
5. பத்திராபதி உருவுகாட்டியது
 
           ஒன்று மொழியாது நன்றியின் விரும்பி
     30    மயக்குறு நெஞ்சின் மன்னவன் முன்னா
           இயக்கன் கூறிய திவளுங் கூறினள்
           உள்ள முருக்கு மொள்ளமர்க் கிளவி
           ஆரா வுள்ள முடையோர் கேண்மை
           தீரா தம்ம தெளியுங் காலென
 
               (உதயணன் எண்ணுதல்)
              29 - 34 : நன்றியின்..........என
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயண மன்னன் அத்தச்சன் பத்திராபதி என்னும் தெய்வமகளே என்றுணர்ந்து அவள் தனக்குச் செய்த உதவியினாலே மிகவும் விரும்பிச் செய்வதறியாது மயங்கும் நெஞ்சினையுடையனாய் இப் பத்திராபதி தானும் முன்னர் இயக்கனாகிய நஞ்சுகன் கூறிய வரலாற்றினையே இவளும் கூறினள். இவளுடைய ஒளியுடைய விரும்புதற்குக் காரணமான மொழி என் நெஞ்சத்தை உறுத்துகின்றது. ஆராயாமையையுடைய அன்புள்ளம் உடையோர் நன்கு ஆராயுமிடத்து ஒரு காலத்தும் அழிவதில்லை என்று தனக்குள்ளே வியவா நிற்ப என்க.
 
(விளக்கம்) நன்றி - உதவி. கைம்மாறு தோன்றாமல் மயங்குகின்ற என்க. பத்திராபதியே இவள் என்றறிதலின் இவளும் என்றான். கிளவி - உள்ளமுருக்கும் என மாறுக. தெளியுங்கால் என்று நினைத்து வியவா நிற்ப என்க.