பக்கம் எண் :

பக்கம் எண்:1013

உரை
 
5. நரவாண காண்டம்
 
5. பத்திராபதி உருவுகாட்டியது
 
         
     35    மேனீ செய்த வுதவிக் கியானோர்
           ஐயவி யனைத்து மாற்றிய தில்லென
           முன்றனக் குரைத்தன முறைமுறை கிளந்து
           நீயும் யானும் வாழு மூழிதொறும்
           வேறல மென்று விளங்கக் கூறி
 
           (பத்திராபதி தன் உருவத்தைக்காட்டி)
                35 - 39 : மேல்............கூறி
 
(பொழிப்புரை) இவ்வாறு மம்மர் கொண்டு நின்ற உதயணனை நோக்கி ஆங்குத் தச்சனாய் நின்ற அப் பத்திராபதி, ''வேந்தே ! முன்பு நீ எனக்குச் செய்த உதவியை நினைக்குமிடத்து யான் அவ்வுதவிக்குக் கைம்மாறாக ஓர் ஐயவி யளவும் இன்னும் நினக்கு உதவி செய்ததில்லை'' என்று முன்னர் அவன் தனக்குக் கூறிய அன்பு கலந்தொழுகும் அறிவிற் பின்னப்பட்ட அருளுரை விரவிய பொருளுரை பலவும் முறைமுறையே முகமனாகக் கூறி ''வேந்தே நீயும் யானும் வாழுங் காலமெல்லாம் வேறலேம் என்று விளங்கும்படி கூறி' என்க.
 
(விளக்கம்) மேல் - முன்பு உதவி, யானைப் பிறப்பில் மந்திரம் செவியறிவுறுத்தித் தெய்வப் பிறப்பிற்குச் செலுத்தியது என்க. ஐயவி - சிறுகடுகு. உரைத்த முகமன் மொழிகள் என்க.