பக்கம் எண்:1018
|
|
உரை | | 5. நரவாண காண்டம் | | 6. நரவாணதத்தன் பிறந்தது | | பொய்யில்
பொருளொடு புணர்ந்த நாளாற்
றெய்வ விளக்கந் திசைதொறும்
விளங்க ஐவகைப்
பூவும் பல்வகை பரப்ப
மதியுறழ் சங்க நிதியஞ்
சொரிய 30 அந்தர விசும்பி னாழிக்
கிழவன் வந்துடன்
பிறந்தனன் பிறந்த பின்றைச்
| | (இதுவுமது)
26 - 31 : பொய்யில்.............பின்றை
| | (பொழிப்புரை) பொய்த்தலில்லாத அறமுதலிய உறுதிப் பொருளோடே பொருந்தியதொரு நன்னாளிலே தான்
பிறந்ததற்கு அறிகுறியாக எல்லாத்திசைகளினும் தெய்வத்தன்மையுடைய
விளக்கமுண்டாகாநிற்பவும், கோட்டுப்பூ முதலிய ஐவகைப் பூக்களும் உலகின்கண் பல்வேறு வகை
மணங்களோடும் நிறங்களோடும் பரவி மலரா நிற்பவும், திங்கள் மண்டிலத்தையொத்த
சங்கம் நிதியங்களைச் சொரியாநிற்பவும், அந்தரமாகிய வானின்கண்ணமைந்த வித்தியாதர
ருலகின்கண் தனது ஆணைச் சக்கரத்தை உருட்டுந் திருவினைக் கருவிலேயே பெற்றுள்ள ஆண்மகன்
வந்து பிறந்தனன், அவன் பிறந்த பின்னர் என்க.
| | (விளக்கம்) ஐவகைப்பூ -
கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ, புதற்பூ என்பன. ஆழிக்கிழவன்,
சக்கரவர்த்தி என்பதன் நேர்மொழி
பெயர்ப்பு.
|
|
|