உரை |
|
3. மகத காண்டம் |
|
7. கண்ணுறு கலக்கம் |
|
சேயிழைக்
கூன்மகள் செவ்வனங் கூறிப்
போகிய பொழுதி னாகிய
சூழ்ச்சி
அரும்பெறற் றோழரைப் பொருந்தலும்
பொருக்கெனப்
பகலிடம் விளக்கிய பருதியஞ் செல்வன் 5
அகலிடம் வறிதி தாக
வத்தத் துயர்வரை
யுப்பாற் கதிர்கரந் தொளிப்ப
|
|
(ஞாயிறு
மறைதல்) 1 - 6 ; சேயிழை.........ஒளிப்ப
|
|
(பொழிப்புரை) சிவந்த
அணிகலன்களையுடைய கூனியாகிய அயிராபதி இங்ஙனம் பதுமாபதியைப்பற்றி
உதயணன்பால் விளக்கமாகச் சொல்லிப் போனபொழுது உதயணன் ஆக்கம்
பெற்ற சூழ்ச்சியையுடைய பெறற்கரிய தோழராகிய உரு மண்ணுவா
முதலியோரிடத்தே சென்றுசேர்தலும், பகற் பொழுதிலே உலகத்தை விளக்கிய
ஞாயிற்றுச்செல்வன் ஞெரேலென அகன்ற இவ்வுலகம் வறுமையடையும்படி
மேற்றிசையில் உயர்ந்த மலைக்கும் அப்பாலே தனது கதிர்களை
மறைத்துக்கொண்டு மறையா நிற்ப என்க.
|
|
(விளக்கம்) செவ்வனம் -
விளக்கமாக; நன்றாக. தோழர் - உருமண்ணுவா முதலியோர். பருதி - ஞாயிறு.
அத்தத்து உயர்வரை - உயர்ந்த அத்தகிரி உப்பால் - அப்பால்.
|