உரை |
|
5. நரவாண காண்டம் |
|
6. நரவாணதத்தன் பிறந்தது |
|
ஆரிய லமைநெறி யரசன்
றன்னுரை ஏத்திய
லாளருங் கூத்தியர் குழுவும்
கோயின் மகளிருங் கோப்பெரு
முதியரும் வாயின்
மறவருஞ் சாயாச் செய்தொழிற் 90
கணக்கருந் திணைகளுங் காவிதிக்
கணமும் அணித்தகு
மூதூ ராவண
மாக்களும் சிறப்பொடு
புணரு மறப்பெருங் குழுவும்
ஏனோர் பிறர்க்கு மிவையென
வகுத்த அணியு மாடையு
மணியு நல்கித்
|
|
(யாவருக்கும்
பரிசளித்தல்)
86 - 94 : ஆரியல்............நல்கி
|
|
(பொழிப்புரை) அரிய இலக்கண
மமைந்த நெறியினை மேற்கொண்டுள்ள அரசனுடைய புகழை எடுத்தோதி ஏத்துகின்ற
தொழிலுடையோரும் விறலியர் கூட்டமும் அரண்மனைப் பணி மகளிரும் அரண்மனைப்
பணியாளராகிய பெருமூதாளரும் வாயில் காக்கும் மறவரும் பிழைபடாத செய்தொழிலையுடைய
கணக்கமாந்தரும் திணைமாந்தரும் காவிதி முதலிய பட்டம்பெற்ற மாந்தர் கூட்டமும் ஆவணக்
களரியோரும் சிறப்போடு கூடிய அறவோருடைய பெருங்கூட்டமும் இன்னோரன்ன பிறவுமாகிய
இவர்களுக்கெல்லாம் இன்னின்னவை வழங்குதல் வேண்டும் என்று பொருணூலோர் வகுத்துள்ள
அணிகலன்களும் ஆடைகளும் மணி பொன் முதலியனவும் வழங்கி என்க.
|
|
(விளக்கம்) ஆரிய லமைநெறி - பிறர்
மேற்கொள்ளுதற்கரிய அரசியல் அமைந்த நெறி என்க. உரை புகழ். ஏத்தியலாளர் - சூதர்.
கோயில் மகளிர் - அரண்மனைப் பணிமகளிர். முதியர் - காஞ்சுகி முதியோர். திணை -
உத்தியம் வகிப்போர். காவிதிக்கணம் - காவிதிப்பட்டம் பெற்றோர் கூட்டம்.
ஆவணமாக்கள் - ஆவணம் எழுதுவோர். ஆவணம் - நில முதலியவற்றின் உரிமை எழுதிய ஓலை.
அறப்பெருங்குழு - அறவோர் கூட்டம்.
|