உரை |
|
5. நரவாண காண்டம் |
|
6. நரவாணதத்தன் பிறந்தது |
|
95 தணியா வின்பந்
தலைத்தலை பெருகத்
தம்பியர் தமக்குந் தருசகன் றனக்கும்
நங்கையைப் பயந்த நலத்தகு
சிறப்பின்
உரத்தகு தானைப் பிரச்சோ தனற்கும்
உவகை போக்கி யூகியும் வருகெனத்
100 தவிர்வில் செல்வந் தலைவந்
தீண்ட
ஆசான் முதலா வந்த
ணாளரும்
மாசில் வேள்வி மகிழ்ந்தனர்
தொடங்கி ஏனை
வகையின் மேனிலை திரியாது
பன்னிரு நாளும் பயத்தொடு கழிப்பிப்
|
|
(உதயணன் தன் சுற்றத்தார்க்குச்
செய்தி கூறி
விடுத்தல்)
95 - 104 : தணியா..............கழிப்பி
|
|
(பொழிப்புரை) இவ்வாறு
இடந்தொறும் இடந்தொறும் குறையாத இன்பமே பெருகாநிற்ப உதயணமன்னன் தன் தம்பியராகிய
பிங்கலனுக்கும் கடகனுக்கும் மைத்துனனாகிய தருசக மன்னனுக்கும் வாசவதத்தையை ஈன்ற
நன்மையால் தகுதி பெற்ற சிறப்பினையும் வலிமையால் தகுதிபெற்ற படைகளையுமுடைய
பிரச்சோதன மன்னனுக்கும் தான் மகப்பேறெய்திய உவகைச் செய்தியைத் தூதுவர்
வாயிலாய்ப் போக்கி யூகியந்தணனும் ஈண்டு வருவானாக என்று தூது விடாநிற்ப, இவ்வாற்றால்
குறைதலில்லாத செல்வங்கள் அச்சுற்றத்தார் பாலிருந்து கோசம்பி நகர்க்கண் வந்து
குவியாநிற்பவும், வேள்வியாசானையுள்ளிட்ட அந்தணரும் மகிழ்ந்து குற்றமற்ற
வேள்வியினைத் தொடங்கிச் செய்யாநிற்ப, மற்றைய வகைகளானும் உயர்ந்த
நிலையினின்றும் பிறழாமல் பன்னிரண்டு நாள்களும் அறப்பயனோடு கழித்து
என்க.
|
|
(விளக்கம்) தலைத்தலை - இடந்தொறும்
இடந்தொறும். தம்பியர் - பிங்கலகடகர். நங்கையை : வாசவதத்தையை. உவகை : ஆகுபெயர்.
ஆசான் - வேள்வியாசான். பயம் - பயன். கழிப்பி -
கழித்து்.
|