உரை |
|
5. நரவாண காண்டம் |
|
6. நரவாணதத்தன் பிறந்தது |
|
105 பெயர்நிலை பெறீஇய
பெற்றி
நாடி உயர்நிலை
யுலகி னுலோக
பாலன் நயமிகு
சிறப்பொடு நகர்மிசைப் பொலிந்த
பலர்புகழ் செல்வன் றந்தன
னாதலின் உருவாண
மாகிய வோங்குபுகழ்ச் செல்வன் 110
நரவாண தத்த னென்றுபெயர் போக்கி
|
|
(பெயரிடல்)
105 - 110 : பெயர்.........போக்கி
|
|
(பொழிப்புரை) பின்னர்
அம்மகவிற்குப் பெயரிடுதற்கு அதன் பிறப்பின் தன்மையை ஆராய்ந்து மேனிலை யுலகத்தின்கண்
அமைந்த நன்மைமிக்க சிறப்பினையுடைய அளகைமா நகரத்தின்கண் பொலிவுற்றிருக்கும்
பலராலும் புகழப்படுகின்ற உலோக பாலனாகிய குபேரன் தன் வரத்தினாலே வழங்கிய
காரணத்தினாலே அன்புருவாகிய உயர்ந்த புகழ்ச் செல்வனாகிய அம்மகவிற்கு ''நரவாணதத்தன்''
என்று பெயரிட்டு என்க.
|
|
(விளக்கம்) நிலைபெறீஇய - நிலைபெறச்
செய்வதற்கு. பெற்றி - தன்மை. உலோக பாலனாகிய செல்வன் என்க. நகர் - அளகை. உரு
ஆணமாகிய செல்வன் எனக் கண்ணழித்துக்கொள்க. ஆணம் - அன்பு. அன்பே உருவமாகிய
செல்வன் என்றவாறு. செல்வன் - மகன். நரவாணன் - குபேரன். இது நரவாகனன் என்பதன் மரூஉ
. தத்தன் - வழங்கப்பட்டவன். எனவே நரவாணதத்தன் என்பது குபேரனால் வழங்கப்பட்ட மகவு
என்னும் பொருளுடையதாயிற்று.
|