உரை |
|
5. நரவாண காண்டம் |
|
6. நரவாணதத்தன் பிறந்தது |
|
135 வெண்முகி லொழுகிய
வெள்ளியம் பெருமலை
உண்முத லுலகிற் கொருமீக்
கூறிய தெய்வ
வாழி கைவலத் துருட்டலும்
பொய்யா தாத லுறுபொரு
ளென்மரும்
இவையும் பிறவு மியைவன கூறி
|
|
(இதுவுமது)
135 - 139 :
வெண்முகில்............கூறி
|
|
(பொழிப்புரை) வெள்ளிய
முகில்கள் துளிக்கும் வெள்ளிப் பெருமலையின்கண் அமைந்த தலைமையுடைய
வித்தியாதரருலகினுக்குப் பலராலும் புகழ்ந்து கூறப்பட்ட தெய்வத் தன்மையுடைய
ஒற்றையாழியை இந்த நரவாணதத்தன் உருட்டுவான் என்று அந்நிமித்திகர் கூறியதும்
பொய்யாது அங்ஙனம் அவ்வாழியை இவன் தன் கை வன்மையாலே உருட்டலும் உருட்டுவான்.
அங்ஙனமாதல் பொருந்துங் காரியமே என்று கூறுவோரும் இவை போல்வனவும் பிறவும் ஆகிய
பாராட்டுரைகள் தத்தமக்கு இயைவனவற்றைக் கூறி என்க.
|
|
(விளக்கம்) ஒழுகிய - துளித்த. பெருமலையுள்
முதன்மையுடைய உலகில் என்க. கைவலம் -
கைவன்மை.
|