உரை |
|
5. நரவாண காண்டம் |
|
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது |
|
45 வாழ்கநங் கோமான் வையக
மெல்லாம் பகையும்
பிணியும் பசியு நீங்கித்
தகையுஞ் செல்வமுந் தாம்படு
கென்ன மிகைபல
புகழ்ந்து தொகைஇ யாற்றிய
இன்ப மொழியவன் பன்முறை யறைந்தபிற் |
|
(இதுவுமது)
45 - 49 :
நங்கோமான்...............பின் |
|
(பொழிப்புரை) நம்பெருமானால் பாதுகாக்கப்படும் நாடெங்கும் பகையும் பிணியும் பசியும் நீங்கிப்
பெருந்தகைமையும் செல்வமும் பெருகுக ! என்று மிகையாகப் பலப்பல புகழ்ந்து தொகுத்துச்
சொன்ன கேட்டோர்க்கு இன்பந் தரும் மொழிகளை அவ்வள்ளுவ முதியோன் பன்முறையுங் கூறி
அறிவித்தபின் என்க. |
|
(விளக்கம்) தகை - அழகுமாம். தாம் : அசை. தொகைஇ
- தொகுத்து. அவன் : வள்ளுவமுதியன். |