உரை |
|
5. நரவாண காண்டம் |
|
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது |
|
நன்னீர் விரவிய செந்நிறச்
சுண்ணம் 60 குலநல மகளிரொடு கோமக
னாடி ஐந்நூற்
றிரட்டி யருங்கடை தோறும்
பசும்பொன்
மாசையும்................... பிடிப்புவிலை
யறியாப் பெருங்கல
முட்படக் கொடித்தேர்
முற்றத்துக் குறையுடை யோர்கட் 65 கீகென
வருளி யெண்டிசை மருங்கினும்
|
|
(பிரச்சோதனன்
விழாக்
கொண்டாடல்)
59 - 65 : நன்னீர்...........அருளி
|
|
(பொழிப்புரை) இனி,
பிரச்சோதன மன்னன் குலநலமமைந்த கோமகளிராகிய தேவிமாரோடு நன்னீரில் கலந்த
செந்நிறச் சுண்ண நீரில் ஆடி நமது ஓராயிரம் அறநிலையங்களின் இடம் பெறலரிய
முன்றில்தோறும் பசிய பொன்னாலியன்ற மாசைகளையும்............கொள்ளும் விலையை
அறிதற்கொண்ணாத பேரணிகலம் உட்படக் கொடியணிந்த தேரினையுடைய நம்மரண்மனை
முற்றத்தின்கண் வறுமையுடையோர்களுக்கு வழங்குக ! என்று கட்டளையிட்டருளி
என்க.
|
|
(விளக்கம்) குலநல மகளிர் - தேவிமார்கள். மாசை
- ஒரு பொற்காசு. 62 ஆம் அடியின் இறுதிச் சீர் இரண்டும் அழிந்தன. பிடிப்பு விலை -
கொள்ளும் விலை. அரண்மனை முற்றம் என்பான் கொடித்தேர் முற்றம் என்றான். குறை -
வறுமை.
|