உரை |
|
5. நரவாண காண்டம் |
|
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது |
|
ஆராக் காதலொ
டணிபா ராட்டி
நீராட் டயர்ந்து பல்கல
னணிந்து சீரார்
செல்வமொடு செவ்வி கொடீஇத் 75 தெரிமா
ணாளர் திறவதிற் சூழ
அரிமா சுமந்த வாசனத் திருந்து
|
|
(இதுவுமது) 72
- 76 : ஆராக்காதல்............இருந்து
|
|
(பொழிப்புரை) இன்புற்று
இன்புற்று அமைதி பெறாமைக்குக் காரணமான புத்தணிகலம் பலவும் அணிந்து நீராடி
அழகுக்காட்சிகளைப் பாராட்டிச் சிறப்புற்ற செல்வத்தோடு எல்லோரும் தன்னை எளிதிற்
காணும்படி செவ்வி கொடுத்துத் தன் அமைச்சர் நன்றாகத் தன்னைச் சூழ்ந்திருப்பத் தான்
அரிமா சுமந்த இருக்கையின்கண் வீற்றிருந்து என்க.
|
|
(விளக்கம்) ஆராக் காதல் - நுகர்ந்து நுகர்ந்து
அமையாத பேரன்பு. அணிபாராட்டல் - அழகினை விரும்பிச் செய்தல். செவ்வி - சமயம்.
கொடீஇ - கொடுத்து. தெரிமாணாளர் - அமைச்சர். பொருள்களை ஆராய்ந்து காணும்
மாண்புடையோர் என்றவாறு.
|