உரை |
|
5. நரவாண காண்டம் |
|
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது |
|
பொன்றாப்
புகழோன் போக்கல்
வேண்டி ஒன்றா
ரட்ட யூகியைத் தரீஇ
இன்றியா னெய்தினெ னெனின்
........... 80 பிரச்சோ தனனவ
னுரைத்ததன் பின்னர்ப்
|
|
(யூகியைப்
பிரச்சோதனன்
வருவித்தல்) 77
- 80 : பொன்றா............பின்னர்
|
|
(பொழிப்புரை) அழியாத
புகழையுடைய அப்பிரச்சோதன மன்னன் பகைவர்களைக் கொன்ற யூகியைக் கோசம்பி
நகரத்திற்குப் போக்குதலை விரும்பித் தன் முன்னிலையில் வரவழைத்து இன்று யான்
இத்தகைய இன்பத்தை எய்தினேன் எனின்.........அவ்விடத்தே அம் மன்னவன் கூறிய
பின்னர் என்க.
|
|
(விளக்கம்) பொன்றா - அழியாத. புகழோன் :
பிரச்சோதனன். கோசம்பிக்குப் போக்கல் வேண்டி என்க. ஒன்றார் - பகைவர். தரீஇ -
அழைத்து. 79 ஆம் அடியின் இறுதிச் சீரழிந்தது. அவண் - அவ்விடத்தே. யான் எய்தும்
இவ்வின்பத்திற்குக் காரணம் நீயேதான் என்று அம்மன்னவன் உரைத்தான் என
ஊகிக்கலாம்.
|