உரை |
|
5. நரவாண காண்டம் |
|
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது |
|
சாலவை
நாப்பட் சலத்திற் றீர்ந்த
கேள்வி யாளரை வேறுதெரிந்
தமைத்து வாதம்
வேண்டிய சாலங் காயன் 95 மாற்றம்
பகுத்தற் காற்றி னாடி
மேற்கொண் டுரைக்கு மெய்த்துறை
மருங்கின் நூற்பாற்
றழீஇய குற்ற மிவையெனக்
கேட்டோர் மனமுணக் கிளந்தவன் கடாவ
|
|
(இதுவுமது) 92
- 98 : சாலவை............கடாவ
|
|
(பொழிப்புரை) நிரம்பிய
அவ் வரசவையின் நடுவே குற்றம் தீர்ந்த நூற்கேள்வியுடைய சான்றோர் சிலரை
ஆராய்ந்துகொண்டு வேறாக இருத்திச் சொற்போர் செய்ய விரும்பிய அச்சாலங்காயன்
அச்சொற்போரை வகுத்துக் கொள்ளுதற்குரிய வழியிலே ஆராய்ந்து அச் சொற்போரினை
மேற்கொண்டு யாம் இப்பொழுது கூறுகின்ற மெய்யான துறையின்கண் அமைந்த நூலின்கண்
தழுவப்பட்ட குற்றங்கள் இவையாம் என்று அவ்வவையின்கண் இருந்து கேட்போருடைய நெஞ்சைக்
கவர்ந்து கொள்ளும்படி எடுத்துக் கூறியவன் அவற்றைப்பற்றி நுங் கருத்து யாதென யூகியை
வினவா நிற்ப என்க.
|
|
(விளக்கம்) சாலவை - அறிஞர் நிரம்பிய அவை.
நாப்பண் - நடுவிடம். சலம் - குற்றம். வாதம் சொற்போர். மனம் உண - மனத்தைக்
கவரும்படி. கடாவ - வினவ.
|