உரை |
|
5. நரவாண காண்டம் |
|
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது |
|
நற்பல
கொடுத்து நம்பி பிறந்த 120 திருநாட்
டானம் பெருநாட் காலை
ஏற்போர்க் கீக வின்றே
போன்மெனக்
கோப்பெருங் கணக்கரைக் குழுவிடை
விளங்கக்
கடைப்பிடி நுகும்பினு ளிடைப்பட
வெழுதுகென் றியூகியு
முணர வேயின னாகிப்
|
|
(இதுவுமது) 119
- 124 : நம்பி...............ஆகி
|
|
(பொழிப்புரை) பின்னர் அக்
குழுவிடை அரசியற் பெருங் கணக்கரை நோக்கி இனி, நரவாணதத்தன் பிறந்த திருவுடைய நாள்
குறித்துச் செய்யுந் தானத்தை ஆண்டுதொறும் அப்பெருநாளில் இற்றை நாளில் இரவலர்க்கு
வழங்குமாறு போலே வழங்குதற் பொருட்டு அக் கணக்கினைக் கணக்கர் குழுவிற்கு விளங்கும்படி
இப்பொழுதே கடைப்பிடி ஓலையின்கண் எழுதிவையுங்கோள் ! என்று கட்டளையிட்டு அந்த
யூகியும் உணரும்படி அக் கணக்கரை ஏவியவனாய் என்க.
|
|
(விளக்கம்) நம்பி : நரவாணதத்தன். இன்றேபோல்
ஏற்போர்க்கு ஈக என்று மாறுக. இனி போன்ம் அசை எனினுமாம். கடைப்பிடி நுகும்பு -
கடைப்பிடித் தொழுகுதற்குரிய கட்டளைகளை எழுதும்
ஓலை.
|