உரை |
|
5. நரவாண காண்டம் |
|
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது |
|
125
பரதகன் றங்கை பறந்தரி
சிந்திய மதரரி
மழைக்கண் மடம்படு காரிகைத்
திலகமா சேனையென் றுலகறி
பவளையும் சாலங்
காயற் கிளையோ
ளாகிய நீல
வுண்க ணிலவுவிடு கதிர்நுதற் 130 பாக்கிய
மமைந்த பார்ப்பியாப் பியையும்
ஆகிய வறிவி னரும்பொருட்
கேள்வி யூகிக்
கீத்துப் பாகுபட லின்றி
யாதே யாயினு மாகவினி
யெனக்கென மாதாங்கு
திண்டோண் மகிழ்ந்தன னோக்கி
|
|
(யூகிக்கு இருமகளிரை மணம்
புரிவித்தல்)
125 - 134 :
பரதகன்.........நோக்கி
|
|
(பொழிப்புரை) பின்னர் அம்
மன்னர்பெருமான் பரதகன் என்னும் அமைச்சனுடைய தங்கையும் செவ்வரி பரந்து ஒழுகிய
மதர்த்த அழகிய குளிர்ந்த கண்களையும் மடப்பமுடைய அழகினையும் உடையவளும் உலகியல்
அறிந்தவளும் ஆகிய ''திலகமாசேனை'' என்பவளையும் சாலங்காயன் என்னும் அமைச்சனுடைய
தங்கையாகிய நீல நிறமுடைய கண்டோர் நெஞ்சை உண்ணும் கண்களையும் ஒளிவிடுகின்ற
கதிர்களையுடைய நெற்றியினையுமுடைய திருவுடைய பார்ப்பனியாகிய ''யாப்பி'' என்பவளையும்
ஆக்கமுடைய அறிவோடு உணர்தற்கரிய நூற்பொருட் கேள்விகளையுமுடைய யூகிக்குத் திருமணம்
செய்வித்து இனியாது நிகழினும் நிகழ்க : என்று யூகிக்கும் தனக்கும் வேற்றுமையின்றி
அவனொடு நட்புரிமை கொண்டவனாய் யானை குதிரை முதலியவற்றை அடக்கி நடத்தும் தனது
திண்ணிய தோளை நோக்கி மகிழ்ந்தவனாய் என்க.
|
|
(விளக்கம்) பரதகன் - பிரச்சோதனன்
அமைச்சர்களுள் ஒருவன்; அரி இரண்டனுள் முன்னது செவ்வரி; பின்னது அழகு. காரிகை - அழகு.
உலகறிபவள் - உலகியலை அறிபவள்; உலகத்தாரால் அறிந்து பாராட்டப்படும்
சிறப்புடையோள் எனினுமாம். பாக்கியம் - திரு புண்ணியமுமாம். பார்ப்பு - பார்ப்பனி.
பார்ப்பியாப்பி என்பதே பெயர் எனினுமாம். மன்னன் தான் அவனுக்குச் செய்வன செய்து
முடித்த உவகையால் இனி, யாதே யாயினும் ஆக! என்று தன் தோளை நோக்கி மகிழ்ந்தனன்.
தோளை நோக்குதல் பெருமகிழ்ச்சிக் குறிப்பு. இதனை, 'குளிர்ந்து தோணோக்கினார்'
(சீவக. 1843) எனவும், 'நரனிருந்து தோள்பார்க்க நான்கிடந்து புலம்புவதோ'
(கம்ப, சூர்ப்பணகைப். 109) எனவும் வருவனவற்றாலும்
அறிக.
|