உரை |
|
5. நரவாண காண்டம் |
|
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது |
|
நவிறொறு மினிய ஞானம்
போலப் பயிறொறு
மினியநின் பண்புடைக் கிழமை 150
உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள
மின்புறப் பிரிவுறு
துன்ப மெம்மாட் டெய்த
எரியுறு நெடுவே லேய
ரிறைவன் வருக
வென்றனன் சென்மதி நீயெனப
|
|
(பிரச்சோதனன்
யூகிக்கு விடை
கொடுத்தல்) 148
- 153 : நவிறொறும்..............நீயென
|
|
(பொழிப்புரை) ''அமைச்சரேறே! ஓதுந்தோறும் இனியவாகும் நூல் நயம் போலப் பழகுந் தோறும்
இனியவாகும் உனது பண்புடைய நட்புரிமையை யாங்கள் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும்
எம்முள்ளம் இன்புறாநிற்கும். அங்ஙனம் இன்புறும் எம்மிடத்தே நீ பிரிதலாலே உண்டாகும்
துன்பமும் வந்து எய்தும்படி தீயையொத்த நெடிய வேலையுடைய ஏயர் குலத்தோன்றலாகிய உதயணன்
உன்னைத் தன்பால் வருக என்று அழைத்துள்ளான். ஆதலின் நீ அவன்பால் செல்லுவாயாக''
என்று கூறி என்க.
|
|
(விளக்கம்) ''நவிறொறு மினிய ஞானம் போலப்
புயிறொரு மினிய நின் பண்புடைக் கிழமை உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள மின்புற'' என்னும்
இதன்கண், ''நவிறொறு நூனயம் போலும் பயிறொறும் பண்புடையாளர் தொடர்பு'' (குறள்.
783) 'எனவும், 'உவப்பத் தலைக் கூடி உள்ளப்பிரித லனைத்தே புலவர் தொழில்'' (குறள்.
394) எனவும் வருங் குறள்களையும் இப் புலவர் பெருமான் பொன்னேபோல் போற்றி
அமைத்திருத்தல் காண்க.
|