உரை |
|
5. நரவாண காண்டம் |
|
8. மதனமஞ்சிகை வதுவை |
|
நலம்பெறு நகரம் புக்கன
னாகி நிலம்பெறு
திருவி னெடுமுடி யண்ணலைக்
கண்டுகண் கூடிக் கழலுறப்
பணிந்து மண்டமர்க்
கடந்த மறமாச் சேனன் 5 உள்ளத்
தன்ன வுவகைசெய் தனவும்
வள்ளற் றனமும் வகுத்தனன் கூறி
|
|
(யூகி
உதயணனுக்குக் கூறல்)
1 - 6 :
நலம்பெறு................கூறி
|
|
(பொழிப்புரை) யூகியந்தணன்
உஞ்சையினின்றும் நலம் பெறுதலையுடைய கோசம்பி நகரத்தின்கண் புகுந்தவனாய் ஆங்கு மேலும்
மேலும் நிலங்களைப் பெறுகின்ற ஆகூழாகிய திருவினையுடைய நெடிய முடியையுடைய அண்ணலாகிய உதயண
மன்னனைக் கண்டு, கூடி அம்மன்னனுடைய வீரக்கழல் தன் தலையில் உறப் பணிந்து எழுந்து
தன்மேல் பகைவர் மண்டி வந்த போர்களை யெல்லாம் வென்று வாகை சூடிய மறமாச்சேனன்
என்னும் அப்பிரச்சோதன மன்னன் தனது உள்ளத்திற்கு இயையத் தனக்குச் செய்த
மகிழ்ச்சிச் செயல்களையும் அவனுடைய வள்ளற் பண்பினையும் வகுத்து உதயணனுக்குக் கூறி
என்க.
|
|
(விளக்கம்) நகரம் : கோசம்பி. நிலம்பெறு திரு -
மேலும்மேலும் நிலம்பெறுதற்குரிய ஆகூழ். சக்கரவர்த்தி என்பார் நெடுமுடி அண்ணல்
என்றார். மறமாச்சேனன் - பிரச்சோதனன். வள்ளற்றனம் - வள்ளற்றன்மை. 'வள்ளற்
றனம்என்னுயிரை மாய்க்கு மாய்க்கு மென்றான்' என்றார் கம்பநாடரும.் (நகர்நீங்கு .
62.).
|