உரை |
|
5. நரவாண காண்டம் |
|
8. மதனமஞ்சிகை வதுவை |
|
அவந்தி நாடு மணியுஞ்
சேனையும் இயைந்து
முந்துறீஇ யிருபாற் குலனும்
தெம்மு னிழியாத் தெளிவிடை
யாகச் 10 செம்மையிற் செய்த
செறிவுந் திண்மையும்
நம்பிக் கீத்த நன்புகழ்
நாடும் இன்னவை
யென்று பன்முறை பயிற்றி
|
|
(இதுவுமது)
7 - 12 :
அவந்தி.............பயிற்றி
|
|
(பொழிப்புரை) அவ்வவந்திநாட்டின் ஊராட்சித் தலைவரும் அழகிய அவ்வுஞ்சை நகரப் பெருங்குடி
மாந்தரும் தம்முள் இயைந்து முற்பட்டு வந்து நின் குலத்தாரும் பிரச்சோதனன் குலத்தாரும்
ஒன்றுபட்டு நின்று இருவர் பகைவரையும் வெல்லுதலன்றி அப்பகைவர் முன் புறங்கொடாத
தெளிவான உடம்பாடு இடையாகச் செம்மையாகத் தான் செய்த செறிவும் திண்மையும் உதயணனுக்கு
அம் மன்னன் வழங்கிய நல்ல புகழையுடைய நாடும் இன்னின்னவையென்று பல்காலும் கூறாநிற்ப
என்க.
|
|
(விளக்கம்) நாடு - நாட்டுத்தலைவர். உஞ்சேனை -
உஞ்சைநகரம் : ஆகுபெயர். நகரத் தலைரும் என்க. இருபாற்குலன் - பிரச்சோதனன் குலமும்
உதயணன் குலமும். இருபாற்குலனும் ஒன்றுகூடி நின்று தம் பகைவர் முன் இழியாமைக்குக் காரணமான
தெளிவுடைமையும் என்க. இவற்றை இடையாகக் கூறி ஈறாக மேல்வருவனவற்றைக் கூறினான் என்பது
கருத்தாகக் கொள்க. நம்பி : முன்னிலைப்
புறமொழி.
|