உரை |
|
5. நரவாண காண்டம் |
|
8. மதனமஞ்சிகை வதுவை |
|
உலம்பொரு மார்பி னுதயண
குமரன் நலம்பெறு
தோழர் நால்வரும் பெற்ற
வலம்பெறு சிறப்பின் வனப்பொடு புணர்ந்த
35 நலம்பெறு கோமுக னாம
வரிசிகன் தகைமிகு
பூதி தவந்தக னென்னும்
நன்ன ரமைந்த நால்வருஞ் சூழத்
|
|
(இதுவுமது)
32 - 37 :
உலம்..........சூழ
|
|
(பொழிப்புரை) உலக்கல்லை
யொத்த மார்பினையுடைய உதயண குமரனுடைய நன்மை மிக்க தோழர் நால்வரும் பெற்ற வெற்றி
பெறும் சிறப்பையுடைய அழகோடு கூடிய நன்மை பெறுதற்குக் காரணமான கோமுகன், அரிசிகன்,
அழகுமிக்க பூதி, தவந்தகன் என்னும் பெயரமைந்த இம்மைந்தர் நால்வரும் தன்னைச் சூழா
நிற்ப என்க.
|
|
(விளக்கம்) உதயணன் மகனாகிய நரவாணதத்தனுக்கு
அவன் தோழராகிய உருமண்ணுவா முதலிய நால்வரும் ஈன்ற கோமுகன் முதலிய நால்வரும்
தோழராய் அவனைச் சூழ்ந்தனர் என்க. வலம் - வெற்றி. என்னும் நன்னர் நாமம் அமைந்த
என இயைத்துக் கொள்க.
|