பக்கம் எண் :

பக்கம் எண்:1063

உரை
 
5. நரவாண காண்டம்
 
8. மதனமஞ்சிகை வதுவை
 
          குறைவில் செல்வமொடு குமார காலம்
    45    நிறையுற வுய்த்து நீர்மையின் வழாஅ
          ஏமஞ் சான்ற விந்நில வரைப்பிற்
          காம னிவனெனக் கண்டோர் காமுறத்
          தாளுந் தோளுந் தருக்கி நாளும்
          நடவா நின்ற காலை மடனார்ந்
 
         (நரவாணதத்தனது காளைப் பருவம்)
           44 - 49 : குறைவில்...............காலை
 
(பொழிப்புரை) குறைவற்ற செல்வத்தோடே வளர்ந்து அப்பள்ளிப் பருவங்கடந்து காளைப்பருவம் எய்திப் பண்பில் வழுவாத பாதுகாவ லடைந்த இந்த நில உலகத்தின்கண் இவனே ''காமன்'' என்று தன்னைக் கண்டோர் காமுறும்படி தாளுந்தோளும் தருக்குற்று நாள்தோறும் நடவாநின்ற காலத்தே என்க.
 
(விளக்கம்) குமாரகாலம் - காளைப்பருவம்; மகளிருடைய மனத்தைக் கவரும் கட்டழகு மிக்க பருவம். தாளுந்தோளும் முறுக்கேறித் தருக்கி நடவாநின்ற காலம் என்க. தருக்குதல் - யாரே எம்மை நிகர்வார் என்று இறுமாப்புறுதல்.