பக்கம் எண் :

பக்கம் எண்:1071

உரை
 
5. நரவாண காண்டம்
 
8. மதனமஞ்சிகை வதுவை
 
          பாவை யிலக்கணம் பற்றி மற்றதன்
          நிறமு நீளமும் பிறவுந் தெரியாச்
          செறிதா ளண்ணலைச் செவ்வியின் வணங்கி
    115    இதன்வடி வொப்போ ளிந்நகர் வரைப்பின்
          மதன மஞ்சிகை யாகுமென வலித்துப்
 
                    (இதுவுமது)
              112 - 116 : பாவை............வலித்து
 
(பொழிப்புரை) அங்ஙனம் எழுதியவன் ஓவியத்தின் இலக்கண முறைமைபற்றி அவ்வோவியத்தின் நிறமும் நீளமும் இன்னோரன்ன பிறவும் உணர்ந்தவனாய் வீரக்கழல் செறிந்த அடிகளையுடைய தலைவனாகிய நரவாணதத்தனைச் செவ்விதெரிந்து வணங்கி, 'இறை மகனே! இவ்வோவியத்தின் உருவத்தை ஒத்த உருவமுடையவள் நமது நகரத்தின்கண் மதனமஞ்சிகை என்னும் ஒரு நங்கையே ஆவள்' என்று துணிந்து கூறி என்க.
 
(விளக்கம்) பாவை - ஓவியம். அண்ணல் தலைவன், நரவாணதத்தன். இதன் - இவ் வோவியத்தின். வலித்து - துணிந்து.