உரை |
|
5. நரவாண காண்டம் |
|
8. மதனமஞ்சிகை வதுவை |
|
இருங்கண் வையகத் தேந்தலு
முரியன் மருந்தேர்
கிளவி மதனமஞ் சிகைதன்
காமரு நோக்கங் காணக்
கூடும் ஏம
வைக லியல்வதா மெனினென
|
|
(கோமுகன்
கூறல்)
141 - 144 : இருங்கண்.........என
|
|
(பொழிப்புரை) அதுகண்ட
கோமுகன் உதயணன்பாற் சென்று, ''பெருமானே! நரவாணதத்தன் அமிழ்தத்தையொத்த
மொழியினையுடைய மதனமஞ்சிகை என்னும் அந்நங்கையின் விருப்பம் உண்டாதற்குக் காரணமான
குறிப்பினையுடைய நோக்கத்தினைக் காணுதற்கு அவளோடு திருமணங்கூடும் இன்பமான நாள் ஒன்று
அவனுக்கு வந்தெய்துவதாயின் பெரிய இடமமைந்த இந்நில உலகத்தில் அவன் இனிது வாழ்தற்கு
உரியவன் ஆவான். அந்நாள் அவனுக்குக் கைகூடாதாயின் வாழ்தல் அரிது'' என்று கூறா நிற்ப
என்க.
|
|
(விளக்கம்) ஏந்தலும் : நரவாணதத்தனும்.
நரவாணதத்தன் மதனமஞ்சிகையின் நோக்கங் காண அவளோடு கூடும் திருமணநாள் வருமாயின்
வாழ்தற்குரியன், இன்றேல் இறந்து படுவான் என்று அறிவித்தபடியாம். மருந்து - அமிழ்தம்.
ஏமம் - இன்பம். வைகல் - நாள். இன்றேல் இறந்துபடுவன் என்பது
குறிப்பெச்சம்.
|