உரை |
|
5. நரவாண காண்டம் |
|
8. மதனமஞ்சிகை வதுவை |
|
145 அன்றுகை நில்லாது சென்ற
வுள்ளமொடு பகன்மதி
போலப் பசந்த குமரன்
இகன்மிசை யுள்ளத் தெவ்வங்
கேட்டுத்
தலைப்பெருந் தேவியுந் தந்தையுங்
கூடிக் குலப்பெருந்
தேவியாக் கோடி விழுநிதி 150
சிறப்பின்விட் டிருந்து நலத்தகு
கிழமைக் கியாவரு
முரியோ ரிவளி
னில்லெனக் காவல்
வேந்தன் காணங் காண்டலின் |
|
(உதயணன்
மதனமஞ்சிகைக்குப்
பொன்விடுத்தல்)
145 - 152 : அன்று...........காண்டலின் |
|
(பொழிப்புரை) இவ்வாறு கூறிய
கோமுகன் வாயிலாய் நரவாணதத்தனுடைய தன்வயமின்றித் தன்னின் நீங்கித் தன்னை
விட்டுச் சென்ற நெஞ்சத்தோடு பகற்பொழுதில் காணப்படும் திங்கள்போல ஒளிகுன்றி உடல்
பசலை பாய்ந்து மாறுபாடு கொண்ட நெஞ்சின்கண் அமைந்த துயரத்தை உதயண மன்னனும்
கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையும் அறிந்து தாயுந்தந்தையுமாகிய அவ்விருவரும் நம்
மகனாகிய நரவாணதத்தனுக்கு நன்மை தக்கிருக்கின்ற காதற்கேண்மைக்கு எல்லாப்
பண்புகளாலும் உரிமையுடைய மகள் இவளையன்றிப் பிறர் யாரும் இல்லை என்று கருதி அவளைத்
தமது குலத்தின் கோப்பெருந்தேவியாகக் கோடற்கு ஒருகோடி சிறந்த பொன்னை ஏனை
வரிசையோடு விடாநிற்ப, அப்பரியப் பொருள்களைக் கலிங்க சேனையை யுள்ளிட்ட அக்கணிகை
மாதர் காணுதலாலே என்க. |
|
(விளக்கம்) அன்று - மதனமஞ்சிகையின் பந்து தன்
மேல் விழுந்த அற்றைநாள். பகல்மதி - பகற்பொழுதில் தோன்றும் திங்கள். எவ்வம் -
துன்பம். தலைப்பெருந்தேவி : வாசவதத்தை. தந்தை : உதயணன். குலப்பெருந்தேவியாகக்
கோடற்பொருட்டு என்க. விட்டிருந்து - விட்டிருப்ப. வேந்தன் : உதயணன். காணம் -
பொன். |