உரை |
|
5. நரவாண காண்டம் |
|
9. மதனமஞ்சிகை பிரிவு |
|
நுணங்குவினை
விச்சையொடு நூற்பொரு ணுனித்த 15
மணங்கமழ் நறுந்தார் மானச
வேகனென் றாற்றல்
சான்ற நூற்றொரு பதின்மர்
அரைச ருள்ளு முரைசெல
விளங்கிய
மின்னார் மணிமுடி மன்னனு மிழிந்து
|
|
மானசவேகன்
வருதல் 14
- 18 : நுணங்கு.................இழிந்து
|
|
(பொழிப்புரை) செங்கோல்
செலுத்துகின்ற வித்தியாதர அரசர் நூற்றுப் பதின்மருள் வைத்து மேம்பட்டுத் தன் புகழே
திசைதொறும் செல்லாநிற்ப, விளங்கிய மின்னுதல் பொருந்திய மணிமுடி சூடிய மன்னனும்
நுணுகிய தொழிலையுடைய மாய வித்தைகளோடே நூற்பொருள் பலவற்றையும் கூர்ந்து பயின்றவனும்
நறுமணங் கமழ்கின்ற மலர்மாலை யணிந்தவனும் ஆகிய ஆற்றல் மிக்க மானசவேகன் என்னும்
வித்தியாதரனும் இவ்விழாக்காண அக்கொடிக்கோசம்பி நகரத்தின்கண் வந்து இறங்கி
என்க.
|
|
(விளக்கம்) ணங்குவினை - நுண்மையுடைய தொழில்.
விச்சை - மாயவித்தை. நுனித்த - கூர்ந்து கற்ற. அரைசர் - அரசர். உரை - புகழ்.
இழிந்து - இறங்கி.
|