உரை |
|
5. நரவாண காண்டம் |
|
9. மதனமஞ்சிகை பிரிவு |
|
கைந்நிமிர்
விளக்கு...................ம்
எண்ணரும் பல்பொறி யெந்திரப்
பொருப்பும்
வண்ண.............................................களும்
30 கண்ணு ளாளர் கைபுனை
கிடுகும் நாடு நகரமு
மாடுநர் பாடுநர்
ஆடலும் பாடலு மன்னவை
பிறவும் கூடிக் காணா
மாடத் தோங்கிய
தண்கோ சம்பிப் பெண்சன நோக்கி |
|
(இதுவுமது)
27 - 34 :
கைந்நிமிர்............நோக்கி |
|
(பொழிப்புரை) கையின்கண்
நிமிர்ந்தெரியும் விளக்கினை ஏந்திய............ம், எண்ணுதற்கரிய பலவேறு விசை
யமைந்த எந்திரமாகிய மலைகளையும் வண்ண............களையும், ஓவியத் தொழிலாளர்
ஒப்பனை செய்த கிடுகுகளையும் நாட்டு மக்களையும் நகரமக்களையும் ஆடுவாரையும் பாடுவாரையும்
அவர்தம் ஆடலையும் பாடலையும் இன்னோரன்ன பிறவற்றையும் அம் மானசவேகன் கண்டு
பின்னரும் உயர்ந்த மேனிலை மாடங்களிலே கூடி நின்று இவற்றைக் கண்டுகளிக்கின்ற
குளிர்ந்த அக் கோசம்பி நகரத்திலுள்ள பெண்மக்களையெல்லாம் நோக்கி
என்க. |
|
(விளக்கம்) இப்பகுதியில் 27 ஆம்-9 ஆம் அடிகளில்
உள்ள சொற்கள் சில அழிந்தன. கண்ணுளாளர் - ஓவியர். அன்னவை பிறவும் மானசவேகன் காணா
என்றும் மாடத்து கூடிக் காணா பெண்சனம் எனவும் கூறிக்கொள்க. சனம் -
மக்கள். |