பக்கம் எண் :

பக்கம் எண்:1091

உரை
 
5. நரவாண காண்டம்
 
9. மதனமஞ்சிகை பிரிவு
 
          இகல்கொள் வீரிய னிகழ்தல் செல்லா
          மண்மிசை வந்தனென் மயக்கற வின்று
          விண்மிசை யுலகிற்கு விழுப்பொருள் பெற்றேன்
          என்னு முவகையின் மின்னேர் நுடங்கிட
    105    மிளிருங் கச்சையோ டொளிவிசும் பெழுந்து
          பொ..................................
 
                    (இதுவுமது)
             101 - 106 : இகல்...........பொ......
 
(பொழிப்புரை) மாறுபாடுடைய மறப்பண்பு மிக்க அம்மானசவேகன் சோர்வின்றி ''யான் இந்நில உலகத்திற்கு வந்தேன். இற்றை நாள் மயக்கமின்றி வானத்தின்கண் உள்ள என் விச்சாதர உலகினும் பெறலரிய சிறந்த பொருள் ஒன்றனை ஈண்டுப் பெற்றுச் செல்கின்றேன்'' என்று எழுந்த மகிழ்ச்சியோடே மின்னல் போன்று அம் மதனமஞ்சிகை தன் மார்பகத்தில் துவளா நிற்ப, ஒளிவிடும் கச்சையோடே ஒளிக்கிடமாகிய வானத்தின்கண் எழுந்து போ.....என்க.
 
(விளக்கம்) இகல் - மாறுபாடு. வீரியன் என்றது இகழ்ச்சி. இகழ்தல் செல்லா என்றது காலந்தாழ்க்காமல் என்றவாறு. பெற்றுச் செல்கின்றேன் என ஒருசொல் வருவித்துக் கொள்க. மதனமஞ்சிகை மின்னல் போல் நுடங்கிட என்க. ஒளிக்கிடமான விசும்பு என்க. 106 ஆம் அடியில் ''போ'' என்னும் ஓரெழுத்து நிற்கப் பிறவும் இக்காதையின் எஞ்சிய பகுதிகளும் இப்பெரு நூலின்கண் இதற்குமேல் உள்ள பகுதிகளும் காலக் கூற்றன் வாய்ப்பட்டன.

9. மதனமஞ்சிகை பிரிவு என்னும் இக்காதையில் 105 ஆம் அடிகாறும் பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் எழுதிய உரையும் விளக்கமும் முற்றின.