உரை |
|
3. மகத காண்டம் |
|
7. கண்ணுறு கலக்கம் |
|
காவினுட்
காவலன் கலங்கக் கோயிலுட்
பாசிழை யல்குற் பாவையும் புலம்பித்
தாயில் கன்றி னாய்நலந்
தொலைஇப்
புகையினுஞ் சாந்தினுந் தகையிதழ்
மலரினும் 75 வாசங் கலந்த மாசி
றிருமனை ஆயஞ் சூழ
வமளியு ளேறி |
|
(பதுமாபதியின்
நிலைமை)
71 - 76 : கோயிலுள்.........ஏறி |
|
(பொழிப்புரை) இனி
இங்ஙனமே உதயணகுமரனைக் கண்கூடாகக் கண்டு சென்ற பசிய அணிகலன்களையுடைய
கொல்லிப்பாவை போன்றவளாகிய பதுமாபதி தானும் அரண்மனையின்கண் பெரிதும்
காம நோயாலே வருந்தித் தாயைப் பிரிந்த ஆன்கன்று போலே
தன் அழகும் பெண்மை நலமும் கெட்.டு நறும்புகையானும் சந்தனத் தானும்
கட்டப்பட்ட மலர் மாலைகளானும் மிக்க மணம் கலந்த குற்றமற்ற தனது
கன்னிமாடத்தே தன் தோழிமார் சூழ்ந்து வரச் சென்று ஆங்குக் கிடந்த
படுக்கைக் கட்டிலில் ஏறிக்கிடந்து என்க, |
|
(விளக்கம்) கோயில்-அரண்மனை. பாவை-பதுமாபதி, தாய் - தாய்ப்பசு. ஆய்-அழகு. நலம் -
பெண்மைநலம். மாசில் திருமனை என்றது கன்னிமாடத்தை. ஆயம் - தோழியர்
கூட்டம். அமளி - படுக்கை. |