பக்கம் எண் :

பக்கம் எண்:114

உரை
 
3. மகத காண்டம்
 
7. கண்ணுறு கலக்கம்
 
           இருவயி னொத்த வியற்கை நோக்கமொ
           டொருவயி னொத்த வுள்ள நோயர்
           மல்லற் றானை வத்தவர் மன்னனும்
           செல்வப் பாவையுஞ் செய்திற மறியார்
     95    கொல்வது போலுங் குறிப்பிற் றாகி
           எல்லி யாம மேழிருள் போலப்
 
                  (இதுவுமது)
          91 - 96 ; இருவயின்...,,,.,.,,,போல
 
(பொழிப்புரை) இவ்வாறு இருவர் நெஞ்சத்தும் ஒத்த இயற்கையை
  யுடைய காமநோக்கத்தோடே ஓரிடத்துப் போல ஈரிடத்தும்
  ஒத்த வருத்தத்தையுடைய வராகிய வளமிக்க படையையுடைய
  வத்தவ நாட்டுமன்னனாகிய உதயணனும் மகதநாட்டுச் செல்வ
  மகளாகிய பதுமாபதி நல்லாளும் தாம் தாம் மேற்செய்யும் செயல்
  யாதென அறியாராய் வருந்தா நிற்ப, அற்றை இரவு இவர்களைக்
  கொன்று தீர்க்குமொருகுறிக்கோளுடையது போல ஒவ்வொரு
  யாமமும் ஏழு ஏழு யாமங்கள் ஒன்றுகூடினாற் போன்று நீளிதாகத்
  தோன்றாநிற்ப வென்க.
 
(விளக்கம்) இயற்கை நோக்கம் - இயற்கையால் உண்டாகும்
  காம நோக்கம். ஒருபடித்தாக ஒத்த நோயர் என்க,, மன்னன்-உதயணன்.
  பாவை - பதுமாபதி. எல்லி - இரவு. இருள்-யாமம்; ஆகுபெயர்.
     ''ஒருநாள் எழுநாள்போற் செல்லும்சேட் சென்றார்
      வருநாள்வைத் தேங்கு பவர்க்கு''        (குறள்-1269)
  எனவரும் திருக்குறளும் காண்க,