உரை |
|
3. மகத காண்டம் |
|
7. கண்ணுறு கலக்கம் |
|
பசுங்கதிர்த்
திங்கள் விசும்பளந் தோடிக்
கடுங்கதிர்க் கனிலி கக்குபு
போகித் தானொளி
மழுங்கி மேன்மலை குளிப்ப
|
|
(திங்கள்
மறைதல்)
97 - 99 : பசுங்..........குளிப்ப
|
|
(பொழிப்புரை) பசிய
ஒளியையுடைய திங்கள் மண்டிலம் வானத்தை அளந்தியங்கிப் பிரிந்துறைவார்
திறத்திலே சுடு நெருப்பை வீசிச்சென்று தனது ஒளிமழுங்கி மேலைத்திசை
மலையிலே மறையாநிற்ப வென்க.
|
|
(விளக்கம்) குளிர்ந்த
ஒளியாகலின் பசுங்கதிர் என்றார். கடுங்கதிர் என்றது பிரிந்துறைவாரைச்
சுடுதனோக்கி. கனலி-தீ மேன்மலை-
அத்தகிரி.
|