பக்கம் எண் :

பக்கம் எண்:116

உரை
 
3. மகத காண்டம்
 
7. கண்ணுறு கலக்கம்
 
         
     100    மீன்முகம் புல்லென வா,,,,,,,,,னா,,,,,,,,,கை
           தெளிமணி விளக்கு மளிமலர்ப் பள்ளியுட்
           புலப்பிற் றீரக் கலப்புறு கணவரை
           முயக்கிடை விடாஅச் சுடர்க்குழை மகளிர்
           தோணமுதற் புணர்ச்சி யிரியத் துட்கென
     105    வாண்முக மழுங்க வலியற வராவும்
           வைவாள் போலும் வகையிற் றாகி
           வெள்வேல் விடலையொடு விளங்கிழை மாதர்க்குச்
           செந்தீக் கதீஇய வெந்தழற் புண்ணினுட்
           சந்தனச் சாந்திட் டன்ன தண்மையொடு
     110    வந்தது மாதோ வைக லின்றென்.
 
                 (விடியற்காலம்)
             100 - 110; மீன்.........இன்றென்
 
(பொழிப்புரை) விண் மீன்களின் முகங்கள் ஒளியிழந்து
  பொலிவுறும்படியும், வா......னா........கை தெளிந்த ஒளியையுடைய
  மணி விளக்கங்கள் (ஒளியிழப்பவும்) வண்டுகள் மொய்க்கும்
  மலர்ப்பள்ளியிடத்தே தாம் ஊடலிற்றீரும்படி பணிமொழி கூறித்
  தம்மோடு கூடும் கணவன்மாரைத் தழுவுதலிடையறாத ஒளியுடைய
  குழையணிந்த மகளிருடைய தோளிற்றுயிலும் கூட்டம் கெடுதலாலே
  அம்மகளிர் துட்கென்று ஒளி முகமழுங்கி வருந்தும்படியும்
  அவர்தம் வலிமை தேயும்படியும் அராவுமொரு வாளரம்போலும்
  தன்மையுடையதாய் அற்றைநாள் விடியற்காலம், வெள்ளிய வேலை
  ஏந்தும் தலைவனாகிய உதயண குமரனுக்கும் விளங்கிய அணிகலன்
  களையுடைய பதுமாபதிக்கும் சிவந்த தீயாற்சுடப்பட்ட வெவ்விய தீப்
  புண்ணின்கண் குளிர்ந்த சந்தனக் குழம்பையிட்டாற்போன்ற
  குளிர்ச்சியோடே வந்தது என்க.
 
(விளக்கம்) மீன் -விண்மீன் இவ்விடத்தே (100) சில சொற்கள்
  அழிந்தன. அளித்தற்கிடனான மலர்ப்பள்ளியுமாம். புலம்பின்-தனிமை
  யினின்று எனினுமாம். இரிதலாலே துட்கென வாண்முகமழுங்க என்க
  விடலை - உதயணன். கதிஇய - கதுவிய. மாதும் ஓவும் அசைகள்.
  இன்றுவைகல வந்தது என்க.

                7 - கண்ணுறு கலக்கம் முற்றிற்று
    -----------------------------------------------------------------------