பக்கம் எண் :

பக்கம் எண்:117

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்தது
 
         
     
           வைகிய காலை வத்தவ ரிறைவனும்
           பைவிரி யல்குற் பதுமா பதியும்
           கண்ணுறக் கலந்த காம வேகம்
           ஒண்ணிறச் செந்தீ யுண்ணிறைத் தடக்கிய
     5     ஊதுலை போல வுள்ளகங் கனற்ற
 
             1 - 5 : வைகிய............கனற்ற்
 
(பொழிப்புரை) பொழுது புலர்ந்த பின்னர் வத்தவமன்னனாகிய
  உதயணகுமரனும் பாம்பின் படம்போன்று விரிந்த அல்குலையுடைய
  பதுமாபதியும் தம்முள் ஒருவரை ஒருவர் கண்ணுற்றமையாலே
  இருவருள்ளத்தும் விரவிய காமவேகம் ஒளியும் நிறமுமுடைய சிவந்த
  நெருப்பை உள்ளே நிரப்பி ஊதப்பட்ட உலைபோன்று அகஞ்சுடாநிற்ப
  என்க.
 
(விளக்கம்) கண்ணுதலாலே கலந்த காமவேகம் என்க. உண்ணிறைத்
  தடக்கிய உலை, ஊதுலை எனத் தனித்தனி கூட்டுக,