உரை |
|
3. மகத காண்டம் |
|
8. பாங்கர்க் குரைத்த |
|
மறுத்தவற்
காணுங் குறிப்புமனத்
தடக்கி
பண்கெழு விரலிற் கண்கழூஉச்
செய்து
தெய்வம் பேணிப் பையென விருந்தபிற
|
|
  (பதுமாபதியின்
நிலை)
6 - 8; மறுத்து.........இருந்தபின்
|
|
(பொழிப்புரை) பதுமாபதி மீண்டும்
அப்பார்ப்பன மகனைக் காணல் வேண்டும் என்னும் அவாவினைப் பிறர்
அறியாமற் றன் மனத்தினுள்ளேயே அடக்கிக்கொண்டு யாழ்பயின்று சிறந்த தன்
விரல்களாலே முகங் கழுவி இறைவணக்கஞ் செய்து மெல்லென இருந்த பின்னர்
என்க.
|
|
(விளக்கம்) பதுமாபதி
என்னும் எழுவாய் வருவித்தோதுக. காணும் குறிப்பு-காண்டற்கவாவும் கருத்து.
பண்கெழுவிரல்-பண்ணிசைத்துப் பயின்ற விரல்கள், கழூஉச்செய்து; ஒரு சொல்;
கழுவி என்க. ''நாளந்தி கோறின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியுமாற்றாற் றொழு தெழுக'' என்பது ஆசாரக்கோவை
|