உரை |
|
3. மகத காண்டம் |
|
1. யாத்திரை போகியது |
|
விறற்போ ருதயணன் விரும்புபு விதும்பி
என்னே யன்னவு முளவோ
வென்றலின் 85 வேட்டதன் வழியே
பாற்பட நாடி ஆதி
வேதத் தகவயிற் பெரியோர்
ஓதிய வுண்டென வுணரக் கூற
|
|
(உதயணன்
கூற்றுந் தோழர்
செயலும்)
83 - 87 ; விறல்............கூற |
|
(பொழிப்புரை) இம்மொழிகளைக்கேட்டிருந்த வெல்லும் போரையுடைய உதயண மன்னன்
பெரிதும் விரும்பி விரைந்து 'என்னே ! என்னே ! இத்தகைய
வித்தைகளும் உலகில் உள்ளனவோ?''என்று கூறி வியந்து வினாதலும், அவன்
விரும்பிய அச்சூழ்ச்சி வழியாகவே பகுதிபட நன்கு ஆராய்ந்து ''பெருமானே!
உண்டு! உண்டு! இத்தகைய அரும்பெறல் விச்சைகள் பல நந்தம்
முதனூலின் அகத்தே நம் சான்றோர்கள் ஓதியுணர்ந்தன உள ;
என்று நன்குணரும்படி கூற என்க.
|
|
(விளக்கம்) விறல் -
வெற்றி. விரும்புபு - விரும்பி. விதும்பி - விரைந்து. என்னே! என்றது
வியப்பு மொழி. பால்-பகுதி. ஆதிவேதம் -அருகனாற் கூறப்பட்ட
முதனூல.்,
|