உரை |
|
3. மகத காண்டம் |
|
8. பாங்கர்க் குரைத்த |
|
20 செவ்வி யறிந்து பையெனக்
குறுகி வேறுபடு
வனப்பின் விளங்கிழை
வையம் ஏறின
மாகி யிளமரக்
காவினுட்
சேறு மோவெனச் சேயிழைக் குரைப்ப |
|
(இதுவுமது) 20-23 ;
செவ்வி..................உரைப்ப |
|
(பொழிப்புரை) செவ்வியறிந்து
மெல்லப் பதுமாபதியை அணுகி மாறுபட்ட அழகினையுடைய விளங்காநின்ற
அணிகலன்களையுடைய கோமகளே ! யாம் இன்றும் வண்டியிலேறி இளமரப்
பொழிலினுள்ளே ஆடற்குப் போவோமா? நின் கருத்தென்னை? என்று பதுமாபதியை
வினவ என்க. |
|
(விளக்கம்) வேறுபடுவனப்பின்
விளங்கிழை என்றது வேறு வேறு வகையான அழகுடைய விளங்கிய இழையினையுடையோய்
என்றும், மெய்வேறுபட்டிரு க்கின்றவளே என்றும் இரு பொருளும்
தோற்றுவித்தலுணர்க. சேறுமோ-செல்வோமா? |